இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன பொதுமக்களுக்கும் இடையே மோதல் - 48 பேர் படுகாயம்

Home

shadow

                        பாலஸ்தீன நாட்டில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 48 பேர் படுகாயமடைந்தனர். 


கடந்த சில ஆண்டுகளாக பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும், பாலஸ்தீன பொதுமக்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் பொதுமக்கள் கற்களை கொண்டு இஸ்ரேல் ராணுவத்தின் ,மீது தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 48 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மோதலில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி ராணுவத்தினர் விரட்டி அடித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :