ஈராக் நாட்டில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 93 பேர் உயிரிழப்பு

Home

shadow

ஈராக் நாட்டில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 93 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈராக் நாட்டில் வடக்கு மோசூல் நகரில் உள்ள டிக்ரிஸ் நதியில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. பார்சி புத்தாண்டு மற்றும் அன்னையர் தினத்தை கொண்டாடுவதற்காக தீவு ஒன்றிற்கு சென்றுக் கொண்டிருந்த படகு எதிர்பாரதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் படகில் செய்த 93 பேர் உயிரிழந்தனர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை, ராணுவம் மற்றும் மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதாலேயே படகு விபத்திற்குள்ளனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :