ஈரானின் சபகார் துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இந்தியாவிற்கு எவ்வித தடையும் இல்லை - அமெரிக்கா

Home

shadow

                              ஈரானின் சபகார் துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இந்தியாவிற்கு அனுமதி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு, விலக்கு அளித்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து, ஈரான் வங்கி, எரிசக்தி துறை மற்றும் ஐரோப்பா, ஆசியாவில் உள்ள அந்நாட்டு நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்தது. இந்நிலையில், ஈரானில் சபஹார் துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், ஆப்கனை இணைக்கும் ரயில்பாதை அமைக்கவும், இந்தியாவிற்கு சில அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நீண்ட ஆலோசனைக்கு பிறகு, சபகார் துறைமுகத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், இங்கிருந்து ஆப்கனுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக ரயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், அமெரிக்கா இந்தியாவிற்கு அனுமதி வழங்கி உள்ளது என தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :