ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றம் - அதிபர் ஹசன் ரூஹானி

Home

shadow

                      ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.


தொலைகாட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாடிய ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி, ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள் மனித தன்மையற்றவை மற்றும் சட்டத்திற்கு புறம்பானவை என தெரிவித்தார். மேலும், அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றம் எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார். ஈரானில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த அமெரிக்க அனுமதிக்காது என குற்றம் சாட்டிய அவர், அதனை மீறியும் குறிப்பிட்ட காலத்தில்  திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை திரும்ப பெற்றுக் கொண்டதை தொடர்ந்து அந்நாடு மீது அமெரிக்கா தொடர் தடைகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :