ஈரான் - விமான விபத்தில் 11 பேர் பலி

Home

shadow


ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து துருக்கி நோக்கிச் சென்ற விமானம் ஈரான் நாட்டு எல்லையில்  விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஷார்ஜா விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 11 பேருடன் தனியார் ஜெட் விமானம் ஒன்று துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றுக் கொண்டிருந்தது. ஈரான் வான்பரப்பில் விமானம் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த மலையில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஈரான் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விமான விபத்து குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 

இது தொடர்பான செய்திகள் :