உக்ரைனில் ராணுவ ஆயுத கிடங்கில் தீ விபத்து

Home

shadow

 

      உக்ரைனில் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

உக்ரைன் நாட்டில் வட செர்னிகிவ் பகுதியில் டிருஷ்பா என்ற கிராமத்தில் ராணுவ ஆயுத கிடங்கு உள்ளது. இது 1, 700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.  இந்த நிலையில்  6-வது பிரிவு ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறின.  இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. நெருப்பு பந்துகள் வானில் எழுந்தன. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து காரணமாக ராணுவ ஆயுத கிடங்கு உள்ள பகுதிகளில் தங்கியிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் இதுவரை  வெளியாகவில்லை.

இது தொடர்பான செய்திகள் :