உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே, இஸ்லாமிய மதரஸா பள்ளியில், பாலியல் தொல்லைக்கு ஆளான 51 மாணவிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

Home

shadow

லக்னோவின் சஹதத்கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் மதரஸா எனப்படும் இஸ்லாமிய மதக்கல்விப்  பள்ளியில் 125-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மதரஸா மேலாளர், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களை மாணவிகள் காகிதத்தில் எழுதி, அதனை பள்ளிக்கு வெளியே எறிந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். மதரஸாவிற்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த 51 மாணவிகள் மீட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் மதரஸா மேலாளரும் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான செய்திகள் :