உலக பயங்கரவாதத்தின் தலைமையகமாக அமெரிக்கா விளங்குகிறது - ஈரான் அதிபர் ஹசன் ரெளகானி

Home

shadow

உலக பயங்கரவாதத்தின் தலைமையகமாக அமெரிக்கா விளங்குவதாக ஈரான் அதிபர் ஹசன் ரெளகானி விமர்சித்துள்ளார்.

ஈரான் நாட்டு ராணுவப் பிரிவான ஈரான் புரட்சி படையை பயங்கரவாத அமைப்பு என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள ஈரான் அதிபர் ஹசன் ரெளகானி, உலக பயங்கரவாதத்தின் தலைமையகமாக அமெரிக்கா விளங்குவதாக தெரிவித்துள்ளார். ஈரான் புரட்சி படை அது உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போர் புரிந்து வருவதாகவும், ஆனால் அமெரிக்காவோ பயங்கரவாத அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். ஐஎஸ் பயங்கரவாதிகளின் தலைவர்களை அமெரிக்கா மிக பத்திரமாக பதுக்கி வைத்துள்ளதாகவும், உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கான செய்திகளை அமெரிக்கா அனுப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பான செய்திகள் :