உலக புத்தக தினம்

Home

shadow

                      புத்தகம் வாசிப்பதையே பொழுதுபோக்காக கொண்டவர்களை புத்தகப் புழு என்போம்.

ஆனால் இன்றைய நவீன காலத்தில் புத்தக புழுக்களை காண்பதே அரிதாகிவிட்டது. புத்தகம்  வாசிப்பதால் நாம் நிறைய தெரிந்துகொள்ள உதவும், அறிவு வளரும் என்பதை அறிந்தும் நாம் புத்தகம் படிப்பதற்கு தவறி வருகிறோம். புத்தகம் படிப்பதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே இன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. தற்போதைய சூழலில் நூலகங்கள் பெயரளவிற்கு மட்டுமே உள்ளன. அங்கு,  நமக்காக அறிவை பெருக்க ஏராளமான புத்தகங்கள் இருந்தும், ஏனோ நாம் அவற்றை  திரும்பிகூட பார்ப்பதில்லை. புத்தகத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் இன்றும் கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே இருக்கிறார்கள் என்பது வேதனையான ஒன்று.

புத்தகம் வாசிப்போம், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை பழக்கபடுத்துவோம் ,
வாழ்வில்  மேன்மை பெறுவோம்..

இது தொடர்பான செய்திகள் :