உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

Home

shadow

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவில் தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். கடந்த 2 ஆயிரத்து 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏசு கிறிஸ்து ஜெருசலத்தில் உள்ள பெத்தலகேம் நகரில் மாட்டு தொழுவத்தில் பிறந்தார். அவர் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி உலகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்து பிறப்பின் மகிமையை வெளிக்காட்டும் வகையில் வீடுகள் மற்றும் ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி  தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். இதைதொடர்ந்து அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

      சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் சென்னை மறை மாவட்ட பேராயர் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். 

      சென்னை சாந்தோம் தேவாலயத்தில் உயர் மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் சென்னை முழுவதிலும் இருந்து திரளான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். உலகில் உள்ள அனைவரும் பொதுவாக கொண்டாடும் விழாவாக கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளதாகவும், சமத்துவம், சகோதரத்துவமும் நிலைத்திட வேண்டும் என பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி தெரிவித்தார். 

      ஆண்டவர் ஏசு கிறிஸ்துவ மதத்திற்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்றும், எளிமையையும், துயரத்தையும் நீக்கி அனைவரும் கொண்டாடும் பெருவிழாதான் கிறிஸ்துமஸ் பண்டிகை என்று கிறிஸ்த்துவர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று சென்னையில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். 

இது தொடர்பான செய்திகள் :