உலகளவில் 5வது இடத்தை இந்தியப் பொருளாதாரம் பிடிக்கும் என சிஇபிஆர் அமைப்பு தகவல்

Home

shadow

அமெரிக்க டாலர் மதிப்பீட்டின்படி, வரும் 2018ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் பொருளாதாரத்தை முந்திச் சென்று உலகளவில் இந்தியப் பொருளாதாரம் 5வது இடத்தைப் பிடிக்கும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் எனப்படும் சிஇபிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் துணைத் தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் கூறுகையில், தற்காலிக பின்னடைவை தாண்டி, இந்தியப் பொருளாதாரமானது, டாலர் மதிப்பீட்டின்படி, 2018ல் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் பொருளாதாரத்தை முந்தி சர்வதேச அளவில் 5வது இடத்தை பிடிக்கும் என்று தெரிவித்தார். உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது தற்காலிகமானதுதான் என அவர் தெரிவித்துள்ளார். 2032ல் அமெரிக்க பொருளாதாரத்தை முந்தி சீனா பொருளாதாரத்தில் முதலிடத்தை பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதால் ஏற்படும் பாதிப்பு எதிர்பார்த்ததை விட குறைவாகவே  இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  

இது தொடர்பான செய்திகள் :