உலகில் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் - டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதலிடம்

Home

shadow

உலகில் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து  ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன.

சர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆயின் முடிவில் டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய 5 நாடுகளில் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டதாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் உலகில் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து  ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. புள்ளி மதிப்பீடு அடிப்படையில் 10 க்கு 7 புள்ளி 5 புள்ளிகளை 5 நாடுகளும் பெற்றுள்ளன, இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்காவுக்கு 6.9 புள்ளிகளும், இங்கிலாந்துக்கு 6.7 புள்ளிகளும் கிடைத்துள்ளன. வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் மிக அதிக அளவில் பணம் சம்பாதிக்கின்றனர் எநவும், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகளில் அரசு நல்ல திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றுகிறதால் அந்த நாடுகளில் வாழும் மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :