உள்நாட்டு போரால் சீர்குலைந்துள்ள லிபியா : இந்தியர்கள் வெளியேற வலியுறுத்தல் - சுஷ்மா சுவராஜ்

Home

shadow

                            உள்நாட்டு போர் காரணமாக லிபியா சீர்குலைந்துள்ளதால் இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக லிபியாவில் அரசியல் நிலையற்ற தன்மை நீடித்து வருவதால், உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது.  ஐ.எஸ் பயங்கரவாதிகளும் காலூன்ற தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, அந்நாட்டின் கிழக்கே செயல்பட்டு வரும் லிபியா தேசிய ராணுவ தளபதி கலிபா ஹாஃப்டர் படையினர், தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் முயற்சியில் லிபியா அரசுப்படையுடன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திரிபோலியில் நிலைமை மோசமாகி வருகிறது. இதையடுத்து இந்தியர்கள் அனைவரும் திரிபோலியில் இருந்து உடனடியாக நாடு திரும்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் லிபியாவின் திரிபோலியில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற அவரது உறவினர்களும், நண்பர்களும் அறிவுறுத்த வேண்டும் எனவும் இதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, பலர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர்.  என தெரிவித்தார். மேலும் 500க்கும் மேற்பட்டோர் இன்னும் திரிபோலியில் உள்ளனர் எனவும் அவர்கள் உடனடியாக வெளியே வேண்டும் என கேட்டுக்கொண்டார்

இது தொடர்பான செய்திகள் :