எத்தியோப்பியாவில் 149 பயணிகளுடன் கென்யா நோக்கி சென்ற விமானம் விபத்திற்குள்ளானதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்

Home

shadow

எத்தியோப்பியாவில் 149 பயணிகளுடன் கென்யா நோக்கி சென்ற விமானம் விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் அந்நாட்டு நேரப்படி காலை 8.38 மணியளவில் 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது. விமானம் தரையில் இருந்து மேல் எழும்பிய 6 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றனர். இதனிடையே விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், நடைபெற்ற தேடுதல் வேட்டையில், தலைநகர் அடிடாஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து கிடப்பது தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 149 பயணிகள், விமானிகள் உள்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :