எரிபொருள் ஏற்றி வந்த லாரி வெடித்து 76 பேர் பலி

Home

shadow

             எரிபொருள் ஏற்றி வந்த லாரி வெடித்ததில் அதன் அருகில் இருந்த 76 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜரில் டேங்கர் லாரி ஒன்று எரிபொருள் ஏற்றி வந்தது. ரயில் பாதைக்கு அருகில் வண்டியை ஓட்டுநர் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்ததும் அதிலிருந்து எரிபொருள் வெளியேறியது. இதனை கண்ட அங்கிருந்த மக்கள் எரிபொருளை சேகரிக்க விரைந்தனர். அப்போது அந்த லாரி மிகப்பெரும் சத்தத்துடன் வெடித்தது  லாரி அருகில் இருந்த மக்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். 

இந்த கோர விபத்தில் 76 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கடைகள் இடிந்து நாசமாகின. இந்த விபத்தின் காரணமாக வரும் புதன் முதல் வெள்ளி வரை அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :