எல்லை தாண்டியதாக 13 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு.

Home

shadow

கச்சத்தீவு அருகே நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளனர்இதனிடையே நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், படகுகளை சேதப்படுத்தி, வலைகளை அறுத்தும் நாசப்படுத்தியதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறுகின்றனர்.    நல்லெண்ண அடிப்படையில் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாகக் கூறிய இலங்கை அரசு, முதல் கட்டமாக 20 மீனவர்களையும் இரண்டாம் கட்டமாக 69 மீனவர்களையும் விடுதலை செய்தது. இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற செயல்கள் நடைபெற்றிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏறபடுத்தி உள்ளது. பாரம்பரிய கடல் பகுதியில் பிரச்சினையின்றி மீன் பிடிப்பதில் நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :