எல்லைச் சுவர் தொடர்பாக எதிர்க்கட்சியின் எதிர்ப்பால் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய அதிபர் டிரம்ப்

Home

shadow

                               எல்லைச் சுவர் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், அதிபர் டிரம்ப் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.


அமெரிக்கா - மெக்சிகோ இடையேயான எல்லையில், சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்கும் விதத்தில், தடுப்புச் சுவர் கட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்தார். இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், எல்லைச் சுவர் திட்டத்திற்காக 35 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய அதிபர் டிரம்ப் விடுத்த கோரிக்கையை, அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்ததால், அரசின் சில துறைகளை முடக்கி டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையேயான பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற்றது, இந்த கூட்டத்தின் போதும் எல்லைச் சுவர் திட்டத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், அதிபர் டிரம்ப் கூட்டத்தின் பாதியில் இருந்து வெளியேறினார். மேலும் இந்த கூட்டம், வெறும் நேர விரயம் எனவும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இது தொடர்பான செய்திகள் :