ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டது - ஐநா சபை விசாரணை

Home

shadow

 

     ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஐநா சபை ஆணையிட்டுள்ளது.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். இதற்கிடையே, ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தில் சென்ற 12 குழந்தைகள் உயிரழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த பேருந்தில் பயணம் செய்த 29 குழந்தைகளும் அந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பேருந்தில் சென்ற 29 அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த  ஐநா சபை ஆணையிட்டுள்ளது. இதேபோல், சவுதி கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவும் விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான செய்திகள் :