ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் விவகாரம் - பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு

Home

shadow

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரம் தொடர்பான ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரெக்சிட் விலகும் நடவடிக்கை வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பிரெக்சிட்டிற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் இடையேயான எதிர்கால உறவு தொடர்பான ஒப்பந்தம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அயர்லாந்து எல்லை விவகாரத்தில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது, அது தொடர்பாக மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டரீதியான இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். ஆனால் இந்த ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தபோவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :