ஐரோப்பிய ஒன்றியம் – பிரிட்டன் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

Home

shadow

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் பிரதமர் இடையேயான பேச்சுவார்த்தையிம் சுமுக தீர்வு எட்டப்பட்டதை தொடர்ந்து, பிரெக்சிட் நடவடிக்கைகான காலக்கெடு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காததன் காரணமாக திட்டமிட்டபடி கடந்த மார்ச் இறுதியில் பிரெக்சிட் நடவடிக்கையை நிறைவேற்ற முடியாமல் போனது. இதனிடையே பிரெச்கிட்டிற்கான காலக்கெடுவை ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நீட்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. இந்த காலக்கெடுவிற்குள் ஒப்பந்தம் எட்டப்பட்டால், பிரெக்சிட் காலக்கெடு மே 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முதல் கட்ட காலக்கெடு முடிவடைய சில தினங்களே உள்ள நிலையில், பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுமுக தீர்வானது எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து அடுத்தக்  கட்ட நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன்  பிரெசல்ஸில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அதிகாலை வரை சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பிரெக்சிட் நடவடிக்கைகான காலக்கெடுவை அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்த காலக்கெடு நீட்டிப்பிற்கு பிரிட்டன் பிரதமரும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். நேரத்தை வீணாக்காமல் நடவடிக்கைகளை துரித படுத்தும்படி, பிரிட்டன் அரசக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :