ஐ.நா சபை - நிக்கி ஹாலே

Home

shadow

 

       சிரியாவில் ரசாயன தாக்குதல் தொடர்ந்தால், பதிலடியும் தொடரும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த கூடாது என உறுதி ஏற்றுள்ளதாக தெரிவித்தார். எனவே சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார். ரசாயன ஆயுதங்கள் அனைத்து சமூகத்தினருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியது என்றும் உலக நாடுகள் ஒன்றிணைந்து ரசாயன ஆயுதங்களை தடை செய்ய மீண்டும் உறுதி ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சிரியாவில் ரசாயன தாக்குதல் தொடர்ந்தால், அமெரிக்காவின் பதிலடியும் தொடரும் என்று நிக்கி ஹாலே தெரிவித்தார்.

                இதற்கிடையே சிரியா மீதான ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா முழு பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில், ரஷ்யா கொண்டு வந்துள்ள கண்டன தீர்மானத்திற்கு சீனா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது தொடர்பான செய்திகள் :