கழுகு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியேவரும் காட்சியை நேரலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

Home

shadow

அமெரிக்காவில் ஒரு கழுகின் கூட்டில் வைக்கப்பட்ட கேமரா மூலம் கழுகு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியேவரும் காட்சி பதிவாகி உள்ளது. இந்தக் காட்சியை நேரலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். 

அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு கழுகின் கூட்டில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கழுகு இரண்டு முட்டைகளை இட்டது. முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளியே வரும் காட்சியும் பதிவாகியுள்ளது. ஹாரியேட் என பெயரிடப்பட்ட இந்த தாய்க்கழுகு  தனது குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சியும் பதிவாகி உள்ளது. இதனை இணைய தளம் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் நேரலையில் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இது தொடர்பான செய்திகள் :