கானா – கோஃபி அன்னான் உடல் அடக்கம்

Home

shadow


      மறைந்த .நா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னானின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது தாய் நாடான கானாவில் அடக்கம் செய்யப்பட்டது.


     1997-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை . நா சபையின் பொதுச் செயலாளராக இருந்த கோஃபி அன்னான், .நா சபையி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் ஆப்பிரிக்க கறுப்பினத்தவர் எனும் பெருமைக்கு சொந்தகாரர் ஆவார்


     கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி தனது 80-வது வயதில் கோஃபி அன்னான் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்


    கோஃபி அன்னானின் தாய் நாடான கானாவிற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு, அந்நாட்டு பழங்குடியினர் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது


    அவரது இறுதி நிகழ்ச்சியில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். முழு ராணுவ மரியாதையுடன் 17 குண்டுகள் முழுங்க கோஃபி அன்னானின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :