காஷ்மீரில் எல்லை அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழப்பு

Home

shadow

காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாடு கோடு அமைந்துள்ள ராவல்கோட் அருகே நேற்றிரவு இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து எல்லையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

      எல்லையில் அண்மை காலமாக அமைதி நிலவி வந்த நிலையில், கடந்த வாரம் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதால், இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே நேற்று மாலை காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தியபடி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேரை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :