காஷ்மீர் விவகாரம் - ஐ.நா- வில் ரகசியமான முறையில் விவாதிக்க சீனா கோரிக்கை

Home

shadow

                                   'ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஐ.நா.  பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க வேண்டும்' என, சீனா கோரிக்கை விடுத்துள்ளது.  ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உடனே, , சீனாவுக்கு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், ஷா முகமது குரேஷி பயணம் மேற்கொண்டார். காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் எனக் கோரினார். எனினும், சீனா தரப்பில் எந்த பதிலும் கூறப்படவில்லை. சமீபத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீனப் பயணம் மேற்கொண்ட போது, காஷ்மீர் பிரச்னை குறித்து, சீனத் தலைவர்கள் எதிர்க் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான், ஐ.நா.  பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைமை நாடான, போலந்து நாட்டின் துாதர் ஜோனா வெரோனெக்காவுக்கு, கடிதம் எழுதி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை, உடனடியாக கூட்ட வலியுறுத்தியுள்ளது. அந்தக் கடிதம், பாதுகாப்பு கவுன்சிலின், பிற உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதன்படி, சீனாவுக்கும் கடிதம் சென்றது. இதையடுத்து 'காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், ரகசியமான முறையில் விவாதிக்கலாம்' என சீனா கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :