காஸா தாக்குதலில் 41 பாலஸ்தீனியர்கள் பலி

Home

shadow


காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 41 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவும் உத்தரவிட்டார். டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிரம்பின் அறிவிப்பின்படி கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள, அமெரிக்க தூதரகம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கிடையே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியத்திற்கும் இடையேயான காஸா எல்லைப்பகுதியில் பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனயர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.  இதில் 41 பாலஸ்தீனியர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மார்கன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

இது தொடர்பான செய்திகள் :