கேட்டலோனியா புதிய அதிபர் க்விம் டோர்ரா தேர்வு

Home

shadow


கேட்டலோனியாவின் புதிய அதிபராக க்விம் டோர்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரிந்து தனி நாடாக உருவாக முயற்சி செய்து வரும் கேட்டலோனியாவிற்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணி தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்தது. கேட்டலோனியாவின் மிக முக்கிய பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான புஜிமோன்ட் இரண்டு முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனை அடுத்து அதிபர் பதவிக்கான தேர்தலில் இருந்து அவர் விலகிக் கொண்டார். இதனை தொடர்ந்து விரைவில் புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு கேட்டலோனியா தள்ளப்பட்டது. புஜிமோன்ட்டின் ஆதரவாளரான க்விம் டோர்ரா அதிபர் பதவிக்கு கடந்த வாரம் போட்டியிட்டார். கேட்டலோனியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளை பெற தவறிய அவர் தோல்வியை தழுவினார். இதனை தொடர்ந்து நேற்று அவருக்கு அதிபர் பதவிக்கு போட்டியிட இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 66 பேர் டோர்ராவுக்கு ஆதரவாகவும்  65 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர். 4 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனை அடுத்து பெரும்பான்மை வாக்குகளை பெற்ற க்விம் டோர்ரா கேட்டலோனியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யபட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், கேட்டலோனியா குடியரசை நிச்சயம் உருவாக்குவேன் என தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :