கேட்டலோனியா மாகாணத்தில் மீண்டும் அரசமைக்க ஸ்பெயின் அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் கார்லஸ் ப்யூஜ்டிமோண்ட் வலியுறுத்தி உள்ளார்.

Home

shadow

ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி மாகாணமான கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என  பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற கேட்டலோனியா தன்னாட்சிப் பகுதி நாடாளுமன்றத் தேர்தலில், தனிநாடு ஆதரவாளர்கள் அதிக தொகுதிகளை வென்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கேட்டலோனியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக 97 சதவீத மக்கள் வாக்களித்தனர். இதனையடுத்து கேட்டலோனியா நாடாளுமன்றம் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்பெயின் அரசு, கேட்டலோனியாவின் தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்ததுடன், அதிபர் கார்லஸ் ப்யூஜ்டிமோண்ட் தலைமையிலான நாடாளுமன்றத்தையும் கலைத்தது. புதிய நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 21.ம் தேதி நடைபெற்றது. இதிலும் கார்லஸ் ப்யூஜ்டிமோண்ட் தலைமையிலான தனிநாடு கோரிக்கையாளர்களே பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினர். ஆனால் இது குறித்து ஸ்பெயின் இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை. இதனால் பெரும்பான்மை மக்களின் எண்ணத்தை ஏற்று கேட்டலோனியாவில் மீண்டும் அரசமைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோயுக்கு கார்லஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்பெயின் அரசின் நடவடிக்கைக்கு அஞ்சி அவர் பெல்ஜியத்தில் தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் ஜனவரி 17ஆம் தேதி கூடவேண்டும் என பிரதமர் ரஜோய் அறிவித்துள்ளார். 17ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பிறகு பத்து நாட்களுக்குள் கேட்டலோனியாவின்  புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :