கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவனின் நினைவாக 118 அடி உயர பிளாஸ்டிக் டவர் - இஸ்ரேல் உலக சாதனை

Home

shadow

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒமர் சயாக் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இச்சிறுவன் லிகோ நிறுவனத்தின் விளையாட்டுப் பொருட்களுக்கு மிகப்பெரிய விசிறியாகும். இந்நிலையில், சிறுவன் பயின்ற பள்ளி ஆசிரியர் அப்பகுதி மக்களின் உதவியுடன் டவர் ஒன்றை கட்ட எண்ணினார். கேன்சரால் அவதியுற்று வரும் ஒமரின் நினைவாக அந்த பிளாஸ்டிக் டவரை கட்டினார். அவர் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் பலரிடமிருந்து நிதி திரட்டினார். அந்த தொகையின் மூலம் பிளாஸ்டிக் துண்டுகளை வாங்கினார். கிரேனில் உதவியினால் 50 ஆயிரம் பிளாஸ்டிக் துண்டுகள் ஒன்றின் மேல் ஒன்று வைக்கப்பட்டு டவர் உருவாக்கப்பட்டது. பல நிற பிளாஸ்டிக் துண்டுகளால் உருவாக்கப்பட்ட இந்த டவருக்கு சிறுவனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 118 அடி பிளாஸ்டிக் டவர் உருவாக்கி இஸ்ரேல் மக்கள் உலக சாதனைப் படைத்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :