கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக மாற்ற அரசியல் ரீதியிலான முயற்சிகளைத் தொடர்வது என அமெரிக்காவும் ரஷ்யாவும் முடிவு

Home

shadow

வடகொரியா அணு ஆயுத நாடாக இருப்பதை அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் விரும்பவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின்  ஆத்திரமூட்டும் வகையிலான பேச்சுகளே கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிக்கக் காரணம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ குற்றம்சாட்டியிருந்தார். வடகொரியாவின் கேஸோலின், டீசல் இறக்குமதிக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, தடைசெய்யப்பட்ட பொருட்கள் வடகொரியாவுக்குச் செல்லாமல் தடுப்பதற்கான கண்காணிப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இத்தகைய புதிய பொருளாதாரத் தடைகள் போரைத் தூண்டும் வகையில் இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :