சர்வதேச இசைத் திருவிழா

Home

shadow

 

சர்வதேச இசைத் திருவிழா ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் நடக்கவுள்ளது. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இசைக் குழுக்கள் ரஷ்யாவுக்கு வருகை புரிந்துள்ளன.

 

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை ரஷ்யாவில் தொடங்கவுள்ள நிலையில், அந்நாடு விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கு மேலும் மெருகேற்றும் வண்ணம், சர்வதேச இசைத் திருவிழா ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் நடக்கவுள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்க, உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றக்கணக்கான இசைக் குழுவினர், செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் குழுமியுள்ளனர். ஒருவரை ஒருவர் விஞ்சும் அளவுக்கு இவர்கள் தங்கள் பேண்ட் வாத்தியங்களை இசைத்து அணிவகுத்து சென்ற காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டதாக இந்த இசைக்கலைஞர்கள் பெருமையுடன் தெரிவித்தனர். 

இது தொடர்பான செய்திகள் :