சவுதி - அரபு நாடுகள் மாநாடு

Home

shadow

கிழக்கு ஜெருசலமில் உள்ள இஸ்லாமிய உடமைகளை பராமரிக்க 9 ஆயிரத்து 785 கோடி ரூபாய் நிதியை சவுதி அரசு வழங்கி உள்ளது.

அரசு நாடுகளின் 29-வது மாநாடானது சவுதி அரேபியாவில் உள்ள தஹ்ரான் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சவுதி அரசர் முகமது சல்மான் தலைமை தாங்கினார். ஈரான் - சவுதி மோதல், ஜெருசலேம் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து மாநாட்டில் பேசப்பட்டது. ஆனால் சிரியா விவகாரம் குறித்து சவுதி அரசர் மாநாட்டில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாத செயல்களில் ஈரான் ஈடுபடுவதாகவும், அரபு நாடுகளின் விவகாரத்தில் ஈரானின் குறுக்கீட்டை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை விமர்சித்த சவுதி அரசர் முகமது சல்மான், கிழக்கு ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய உடமைகளை பராமரிக்க 9 ஆயிரத்து 785 கோடி ரூபாய் நிதியை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் 22 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.


இது தொடர்பான செய்திகள் :