சாமர்த்தியமாக 226 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானி

Home

shadow

                     விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜின்கள் பழுதானதால் சாமர்த்தியமாக அருகில் உள்ள சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் ஒரு விமானி. ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள ஜுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் நகருக்கு யூரல் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஏர்பஸ் ‘ஏ321’ விமானம் 226 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று விமானம் மீது  மோதியதால் இரண்டு என்ஜின்களும் பழுதடைந்தன. அத்துடன் லேண்டிங் கியரும் வேலை செய்யவில்லை.  உடனடியாக எதைப் பற்றியும் யோசிக்காமல் விமானி மக்காச்சோள காட்டில் அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். தரையிறக்கும்போது 9 குழந்தைகள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. விமானியின் துணிச்சலான முடிவால் 226 பயணிகள் உயிர்தப்பினர். இது ஒரு அதிசயமான அவசர லேண்டிங் என விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :