சிரியா விவகாரம் - ரஷ்யா போர் எச்சரிக்கை நிராகரிப்பு

Home

shadow


      சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை .நா.பாதுகாப்பு சபை நிராகரித்துள்ளது. இதனையடுத்து 3-வது உலகப் போருக்கு தயாராகுமாறு தனது நாட்டு மக்களை ரஷ்யா அறிவுறுத்தி உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க கூட்டுப்படை சிரியாவில் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா இது குறித்து விவாதிக்க .நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து அவையின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றதுஇதில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா கொண்டு வந்த  கண்டன தீர்மானத்திற்கு சீனா மற்றும் பொலிவியா நாடுகள் மட்டுமே ஆதரவளித்தன. இதனையடுத்து ரஷ்யாவின் தீர்மானத்தை .நா.பாதுகாப்பு சபை நிராகரித்தது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, சிரியாவில் ரசாயன தாக்குதல் தொடர்ந்தால், அமெரிக்காவின் பதிலடி தொடரும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் யூகோஸ்லேவியா, ஈராக், லிபியாவைத் தொடர்ந்து சிரியாவிலும் அமெரிக்கா தனது ரத்தம் தோய்ந்த படுகொலைகளை அரங்கேற்றி வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்ரசாயன ஆயுதங்கள் தடுப்புக்குழுவின் விசாரணை முடியும் முன்னரே, சிரியா மீதான தாக்குதலை மேற்கத்திய நாடுகள் முன்னெடுத்து விட்டதாக கூறியுள்ளார். மற்ற நாடுகளில் இதுபோன்ற படுகொலைகளை அமெரிக்க நிகழ்த்தி வருவது வரலாற்று உண்மை என்றும் புதின் அறிக்கையில் கூறியுள்ளார்.   இந்த நிலையில் ரஷ்யாவின் கண்டனத் தீர்மானம் .நா.ல் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 3-வது உலகப் போருக்கு தயாராகுமாறு ரஷ்ய மக்களுக்கு அந்நாட்டு தொலைக்காட்சி அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலைமை ஏற்படும் என்று ஏற்கனவே தகவல் பரவி இருந்தாலும், ரஷ்ய தொலைக்காட்சியின் அறிவிப்பு உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது

இது தொடர்பான செய்திகள் :