சிரியா - இயல்பு நிலை திரும்புகிறது

Home

shadow


ரசாயனத் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து தற்போது சிரியா மக்கள், மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

சிரியாவில் கிளர்ச்சிப் படையினரை அடக்குவதாகக் கூறி, அதிபர் அஸாத் ஆதரவு ராணுவம் நடத்திய ரசாயனத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, அந்நாட்டு அரசு நிலைகள் மற்றும் அலுவலகங்கள் மீது அமெரிக்க கூட்டுப் படை சார்பில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. சனிக்கிழமை அதிகாலை வேளையில் நடைபெற்ற இந்த தாக்குதல் சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காபிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள்இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தின. இதில் சிரியாவின் இரண்டு அறிவியல் ஆய்வு மையங்கள் மற்றும் ஆயுத  சேமிப்பு கிடங்குகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பிறகு தற்போது மெல்ல மெல்ல அந்நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.. ஏவுகணை தாக்குதலில் குடிமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், சந்தைகள்  உள்ளிட்ட மக்களின் தினசரி வாழ்வோடு தொடர்புடைய இடங்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை  நடத்துவது தொடர்பாக புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற  அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தற்போது திட்டமிட்டு வருகின்றன.

இது தொடர்பான செய்திகள் :