சிரியாவில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை முழுமையாக அழித்த பின்னரே அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறும் - டிரம்ப்

Home

shadow

                            சிரியாவில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை முழுமையாக அழித்த பின்னரே அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டதாகவும், சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாத இறுதியில் அறிவித்தார். இதற்கு கூட்டணி நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடியாக வெளியேறப்போவதில்லை என டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியாவில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை முழுமையாக அழித்த பின்னரே அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறும் என தெரிவித்தார். சிரியாவில் இருந்து படைகளை திரும்ப பெறுவது உறுதி எனவும், ஆனால் அது உடனடியாக நடைபெறும் என தான் தெரிவிக்கவில்லை என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார். தான் பதவியேற்ற போது ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் அனைத்து இடங்களிலும் பரவி இருந்ததாகவும், ஈராக்கி தற்போது ஐஎஸ் பயங்கரவாதிகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் குறித்து பேசிய அவர், ஈரான் நாடு தற்போது மோசமான நிலையில் இருப்பதாகவும், அணு சக்தி ஒப்பந்தத்தை  திரும்ப பெற்றது அங்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், ஈரான் தனது படைகளை அனைத்து இடங்களில் இருந்தும் திரும்ப பெற்று வருவதாகவும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :