சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் இருந்த கடைசி பகுதியையும் கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றி விட்டதாக தகவல்

Home

shadow

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் இருந்த கடைசி பகுதியையும் கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரியாவில் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் குழுக்களுக்கு இடையேயான மோதலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நுழைந்ததைத் தொடர்ந்து மும்முனைப் போராக மாறியது. .எஸ் பயங்கரவாதிகள் வசம் உள்ள பகுதிகளை மீட்கும் பணியில் அரசு படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் ஈடுபட்டனர், இந்நிலையில், சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் இருந்த கடைசி பகுதியையும் கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பகுஸ் பகுதியை அரசு படைகள் சுற்றி வளைத்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த பகுதியை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றி விட்டதாகவும், சரணடைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .எஸ் பயங்கரவாதிகள் முழுமையாக அகற்றப்படவில்லை எனவும், 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான ஐ,எஸ் பயங்கரவாத குழுவின் ஸ்லீப்பர் செல்கள் சிரியாவில் பதுங்கி இருக்கலாம் எனவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது

இது தொடர்பான செய்திகள் :