சிறுபான்மையினரின் நலன்களைக் காக்க சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க உரிய நடவடிக்கை

Home

shadow

 

     சிறுபான்மையினரின் நலன்களைக் காக்க சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க உரிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. பலூசிஸ்தானில் அரசு அடக்குமுறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

     பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகின்றன. இதனை அடக்க அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பலூசிஸ்தானில் தனிநாடு கோரிக்கை வலுத்துள்ளதால், அதனை ஒடுக்க அடக்குமுறைகளை பாகிஸ்தான் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினர்களின் நலன்களைப் பாதுகாக்க, சர்வதேச விதிமுறைகளுக்கும் பொறுப்புணர்வுக்கும் இணங்க, உரிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பலூசிஸ்தானில் அடக்குமுறைகளைக் கையாள்வதையும், மனித உரிமைகள் மீறப்படுவதையும் பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பான செய்திகள் :