சிறைத் தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகே, இந்திய தரப்பிடம் ஒப்படைக்கப்படுவார் தஹாவுர் ராணா - தேசியப் புலனாய்வு

Home

shadow

          மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த தஹாவுர் ராணா, அமெரிக்க சிறையில் அனுபவித்து வரும் தண்டனைக் காலம் முடிந்த பிறகே இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று தேசியப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.


மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர் நிகழ்த்திய தாக்குதலுக்கு ஆயுதங்களை வழங்கியதாக, அமெரிக்காவில் தஹாவுர் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அவர் அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் ராணாவுக்கு தண்டனை வழங்குவதற்காக, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, விவாதிப்பதற்கு தேசியப் புலனாய்வு அமைப்பினர் கடந்த மாதம் 13-ஆம் தேதி அமெரிக்கா சென்றனர். அவர்களிடம் ராணாவின் சிறைத் தண்டனை முடிவுடைந்த பிறகு அவர் நாடு கடத்தப்படுவார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் அவரது சிறைத் தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகே, இந்திய தரப்பிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தகவல்களை, கடந்த மாதம் அமெரிக்கா சென்ற தேசியப் புலனாய்வு அமைப்பின் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க சட்டப்படி, ஒருவருக்கு ஒரே குற்றத்துக்காக இரு முறை தண்டனை விதிக்க முடியாது. அதனால்  டெல்லி தேசிய ராணுவ கல்லூரி, சில நகரங்களில் உள்ள யூதர்களின் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுகளில், அவருக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :