சீன - மிகப்பெரிய பயணிகள் விமான கண்காட்சி

Home

shadow

 

      ரஷ்யா மற்றும் சீன நாட்டினால் கூட்டாக தயாரிக்கப்பட்ட CR-929 என்ற மிகப்பெரிய பயணிகள் விமானத்தின் முன்பகுதியின் மாதிரி அமைப்பு  சீனாவில் நடைபெற்ற விமான கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

சீனாவின் தெற்கு குவாங்டாங்  மாகாணத்தில் நடைபெற்ற மிகப்பெரிய விமான கண்காட்சி நிகழ்ச்சியில்  ரஷ்யா மற்றும் சீனா நாட்டின் கூட்டு தயாரிப்பில் உருவான  CR-929 என்ற மிகப்பெரிய பயணிகள் விமானத்தின் முன்பகுதியின் மாதிரி அமைப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 2025ஆம் ஆண்டிற்குள் இந்த விமானம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய லேசர் ஆயுதம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. LW-30 என்ற குறுகிய தூர இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஆயுதம் சிறிய வகை ட்ரோன்களை தாக்கி அழிக்க பயன்படும் என்று கூறப்படுகிறது.மேலும்  மேம்படுத்தப்பட்ட  அன்சாட் வகை ஆம்புலன்ஸ்  ஹெலிகாப்டர்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :