சீனா பொருள்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் வரி - அதிபர் டிரம்ப் அதிரடி

Home

shadow

சீனாவுடனான வர்த்தக மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு லட்சத்து 37  ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீது 10 சதவீத கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவின் முறையற்ற வர்த்தக நடவடிக்கையால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு லட்சத்து 37  ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீது 10 சதவீத கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பேசிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட், சீனாவின் முறையற்ற வர்த்தக நடவடிக்கையை மாற்றிக்கொள்ள அதிபர் டிரம்ப் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் சீனா தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாததாலேயே கூடுதல் வரி உத்தரவை  அதிபர் டிரம்ப் விதித்ததாகவும் தெரிவித்தார். கூடுதல் வரி விதிக்கப்பட உள்ள பொருட்களின் பட்டியலை வரும் ஆகஸ்ட் மாதம் வர்த்தக பிரதிநிதிகள் குழு கூடி முடிவு செய்யும் எனவும், செப்டம்பர் மாதம் இறுதி அறிவிப்பு வெளியாகும் எனவும் ராபர்ட் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :