சீனாவில் தொடர் கனமழை – 16 பேர் பலி

Home

shadow

            சீனாவில் தொடர் கனமழை – 16 பேர் பலி

            சீனாவில் தொடர் கனமழையால் அப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.

           சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் வாகனங்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழை நீரினால் முழ்கியுள்ளது.

           குவாஞ்சி ஜூவாங் உள்ளிட்ட 6 நகரங்கள் கனமழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

           மழை இடிபாடுகளில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 12 பேர் காணவில்லை. அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே கனமழையால் ஏற்பட்டுள்ள சேதம் அதிகமாக வாய்ப்புள்ளது.

இது தொடர்பான செய்திகள் :