சீனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதச் செய்ததுடன் மக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல்

Home

shadow

                         நாடு முழுவதும் விநாயகரின் பிறந்தநாள்,  விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்துக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 


ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆவணி மாதம் 13ம் தேதியாகிய இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.  


களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து, வீடு அல்லது பொதுவான ஒரு இடத்தில் வைத்து அதற்கு வழிபாடு செய்து வருகின்றனர்.


நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் நிலையில், சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் அருகே உள்ள ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். 


மேலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்துள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.


விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு பூஜிக்க தேவையான பொருட்களை வாங்க மக்கள் படையடுத்த வண்ணம் உள்ளனர்
. 

இது தொடர்பான செய்திகள் :