சுனாமியின் 13ம் ஆண்டு நினைவு தினம்

Home

shadow

தமிழகத்தில் சுனாமி கோரதாண்டவமாடி 13 ஆண்டுகள் கடந்த பிறகும், அதன் அடி மட்டும் நம் மனதில் அப்படியே ரணமாய் நீடிக்கின்றது. காலை அமைதியாய் உதித்த சூரியன் மறையும் தருணத்தில், உலகையே புரட்டிப்போட்ட, சுனாமியின் நினைவு தினம்தான் இன்று... 

      2004 டிசம்பர் 26 தேதி, சுனாமியின் சுழற்சியில் இருண்டுபோனது பலரது வாழ்வு. இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு எழுப்பிய பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் கடலோர பகுதிகளை நிர்மூலமாக்கியது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கானோர் உயிரையும் உறவுகளையும் இழந்து கதறி அழுதது இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த சுனாமியின் கோர தாண்டவத்தில் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆழிப்பேரலையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உடமைகளையும், உயிரையும் பறிகொடுத்த பல குடும்பங்கள் இன்றும் பொருளாதார அளவில் மீள முடியாமல் தவித்து வருகின்றன.

      வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வீடுகள் இன்னும் பலருக்கு கிடைக்காத சூழலில் சம்பாதிக்கும் குறைந்த வருவாயையும் வீட்டு வாடகைக்கு செலவிட்டு வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். உறவுகள் மற்றம் உடமைகளை இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசுகள் இதுவரை எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

ஆண்டுகள் பல கடந்தும் ஆழிப்பேரலையால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் தங்கள் மனதிலிருந்து அகலவில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.  

இது தொடர்பான செய்திகள் :