சூடான் நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவத்தின் ஆட்சி அமலில் இருக்கும் - அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்

Home

shadow

           சூடான் நாட்டில் அதிபர் ஒமர் அல் அஸாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட்தை தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவத்தின் ஆட்சி அமலில் இருக்கும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆவட் மொகமது இபன் தெரிவித்துள்ளார்.


சூடான் நாட்டில் அதிபர் ஒமர் அல் அஸார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக அத்தியவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள்களின் விலை பண்மடங்கு உயர்ந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை அடுத்து மீண்டும் அத்தியவசிய பொருட்களின் விலையை உயர்த்தப்போவதாக அதிபர் ஒமர் அல் அஸார் அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள் அதிபரை பதவி விலக்க்கோரி நாடாளுமன்றத்தை ,முற்றுகை இட்டு போர்ட்டத்தில்; ஈடுபட்டுவந்தனர். போராட்டம் நேற்று தீவரம் அடைந்த்தை தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் அதிபரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது. மேலும் இது குறித்து பேசிய அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆவட் மொகமது இபன், மூன்று மாத்த்துக்கு நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சூடானில் ராணுவ ஆட்சியே அமலில் இருக்கும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து 30ஆண்டுகள் ஒமர் அல் அஸாரின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது

இது தொடர்பான செய்திகள் :