சூடான் நாட்டில் தொடர்ந்து நிலையான ஆட்சி கோரி பொதுமக்கள் போராட்டம்

Home

shadow

சூடான் நாட்டில் அதிபர் ஒமர் அல் பஸீரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து நிலையான ஆட்சி கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சூடான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அத்தியவசியப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இதனை அடுத்து மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தப்போவதாக அந்நாட்டு அதிபர் ஒமர் அல் பஸீர் தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஏராளமான பொதுமக்கள் அதிபரை பதவி விலக கோரி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை தொடர்ந்து ராணுவத்துடன் உதவியுடன் நேற்று முந்தினம் அதிபர் ஒமர் அல் பஸீரின் ஆட்சி கைக்கப்பட்டது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இடைக்கால ஆட்சி தற்போடு சுடானுக்கு தேவையில்லை எனவும் தாங்கள் நிலையான ஆட்சியையே விரும்புவதாக  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்

இது தொடர்பான செய்திகள் :