ஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார்

Home

shadow

         ஜப்பானில் ஜி20 மாநாடு  – பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார்

        ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார்.

ஜி20 மாநாடு ஜப்பானில் நாளை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் ஜப்பான் சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவழியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று மதியம்  ஜப்பான் அதிபர் ஷின்சோ அபேவை, பிரதமர் மோடி சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து விவாதிக்கிறார். மேலும், ஜி20 மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை  சந்தித்து பிரதமர் மோடி  ஆலோசனை நடத்தவுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :