ஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

Home

shadow               ஜப்பான் நாட்டில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பான் நாட்டின் யமகட்டாவின் சுரோகாவில் 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளில் வீடுகள் இடிந்து விழந்தன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு சாலையில் தஞ்சமடைந்தனர்.
சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான் அரசு, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

இது தொடர்பான செய்திகள் :