ஜப்பான் நாட்டில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆக அதிகரிப்பு

Home

shadow

ஜப்பான் நாட்டில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மழை வெள்ளம் காரணமாக 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர். நேற்று மழை சற்று குறைந்ததை அடுத்து, மீட்பு படையினர் மீட்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிக்காக 700 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜப்பானில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது 4 நாடுகள் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இந்த வார இறுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்ல உள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :