ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க பிரிட்டன் அரசு மறுப்பு

Home

shadow

                 ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க பிரிட்டன் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரிட்டன் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். பிரிட்டனின் காலணி ஆதிக்கத்தின் கறுப்பு பக்கங்களில் ஒன்றாக மாறிப்போன இந்த நிகழ்வில் நூற்றாண்டு நினைவு தினம் விரைவில் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக இந்தியாவிடம் பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பான விவாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, பல்வேறு கட்சி எம்.பிக்கள் சார்பில், ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்பாக பிரிட்டன் பிரதமர் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பிரிட்டன் பள்ளிகளில் இதனை பாடமாக இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இது தொடர்பாக பதில் அளித்த பிரிட்டனின் துணை வெளியுறவு துறை அமைச்சர் மார்க் ஃபீல்டு, ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற போதே பிரிட்டன் அரசு அதனை கடுமையாக கண்டித்திருந்ததாகவும், கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதில் சிறிது தயக்கம் தற்போது உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக பிரிட்டன் அரசு தற்போதும் வருத்தம் கொண்டுள்ளதாகவும், நூற்றாண்டு தினத்தில் இந்தியாவில் உள்ள நினைவிடத்தில் உரிய மரியாதை செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :